வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (07:21 IST)

இடைத்தேர்தல் – அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக அறிக்கை !

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாங்குநேரி ,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அதிமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தாமக ஆகியக் கட்சிகள் அதிமுகவுக்கு ஏற்கனவே ஆதரவளித்திருக்கும் நிலையில் இப்போது தேமுதிக வும் ஆதரவு அளித்துள்ளது.

இது சம்மந்தமாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தமிழகத்தில் நடைபெற இருக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும், வேட்பாளர்களின் வெற்றிக்குப் பணியாற்ற வேண்டும். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரித் தொகுதியை பாஜக கேட்டு அதற்கு அதிமுக மறுத்து விட்டதால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு இன்னும் தெரிவிக்கவில்லை.