வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (13:26 IST)

திமுக கூட்டணியை விட வலிமையானது பாஜக கூட்டணி.. சொன்னது யார் தெரியுமா?

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வலிமையானது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திமுக கூட்டணியை மிஞ்சும் வகையில் பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
 
பிரதமர் மோடி கன்னியாகுமரி வரயிருப்பதை அடுத்து அங்கு சென்று பார்வையிட்ட பொன் ராதாகிருஷ்ணன் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் பிரதமர் வருகை மூலம் கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி உறுதியாகும் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் சரத்குமார் கட்சி பாஜகவுடன் இணைந்ததை வரவேற்கிறேன் என்றும் மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமராக வேண்டும் என்று ஆதரவு தெரிவிக்கும் அனைத்து கட்சியினரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் திமுக கூட்டணியை விட பாஜக கூட்டணி வலிமையாக இருக்கிறது என்றும் தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் ’மீண்டும் மோடி வேண்டும் மோடி’ என்ற கொள்கையின் அடிப்படையில் நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்
 
Edited by Mahendran