வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 13 மார்ச் 2024 (11:27 IST)

அதிமுக கூட்டணியில் மன்சூர் அலிகான் கட்சி? எத்தனை தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய பெரிய கட்சிகள் உட்பட எந்த கட்சியும் இதுவரை கூட்டணிக்கு வரவில்லை என்பதால் சின்ன சின்ன கட்சிகளிடம் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் அதிமுக தலைமை இடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு நிர்வாகிகள் கே பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்களை மன்சூர் அலிகான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தங்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சேருமா? சேர்ந்தால் அக்கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran