வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (21:36 IST)

மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
அதில், வரும் மார்ச் 3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
எனவே தமிழகம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி  43000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.