1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (20:55 IST)

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து நடிகர் சரத்குமார் விமர்சனம்

sarathkumar
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பட்ஜெட் தாக்கல் செய்தது. இதுகுறித்து, அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், த.மா.கா மற்றும் அகில இந்திய சமத்து மக்கள் கட்சியும் விமர்சித்துள்ளது.

தமிழக அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அகில இந்திய சமத்து மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''தமிழக அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மக்களைக் கவர்வதற்காக வெளியிடப்பட்ட பட்ஜெட்டாக தெரிகிறது.
 
ஏற்கனவே உள்ள கடனை குறைப்பதற்கு வழிவகை செய்யாமல் கவர்ச்சிகரமாக பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும்'' என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்,

''தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வறுமையைப் போக்கவும், வேலை வாய்ப்பை அதிகரிக்ககூடிய பொருளாதார நிலையை உயர்த்தக் கூடிய பட்ஜெட்டாக அமையாமல், தமிழக விவசாயிகளின் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது ''என்று விமர்சித்துள்ளார்.