வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (10:46 IST)

6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்.. மேலும் பல! – தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள் 2024!

MK Stalin
தமிழக அரசி ஆண்டு பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.


 
தமிழ்நாடு பட்ஜெட் 2024 அறிவிப்புகள்:

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி

சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு. சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு. சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு. வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு

சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ₹2 கோடி ஒதுக்கீடு. அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்
தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு

கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்
₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்

சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்

கீழடியில் ₹17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும்

2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ₹356 கோடி ஒதுக்கீடு. 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ₹500 கோடி ஒதுக்கீடு

Edit by Prasanth.K