வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (12:02 IST)

பள்ளி வேன் மோதி சிறுவன் உயிரிழப்பு! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை வளசரவாக்கம் தனியார் பள்ளியில் வேன் மோதி பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தீட்சித். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற தீட்ஷித் பள்ளி வளாகத்தில் நடந்து சென்றுள்ளான்.

அப்போது பள்ளி வேன் ஒன்று மாணவர்களை இறக்கி விட்டுவிட்டு பின்னோக்கி வந்துள்ளது. அந்த வேனின் டிரைவர் பூங்காவனம் பின்னால் சிறுவன் செல்வதை கவனிக்காமல் வேனை இயக்கியதில் வேன் மோதி சிறுவன் தீட்ஷித் உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் டிரைவர் பூங்காவனத்தை கைது செய்துள்ளனர்.