1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (11:39 IST)

சபரிமலையில் பூஜை, பிரசாத கட்டணம் உயர்வு! – தேவசம்போர்டு அறிவிப்பு!

கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை மற்றும் பிரசாதத்திற்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பலர் மாலை போட்டு வந்து தரிசனம் செய்கின்றனர். சபரிமலையில் நடைபெறும் படி பூஜை உள்ளிட்ட விசேஷ பூஜைகளை காணவும், பிரசாதத்திற்கும் வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை உயர்த்த தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இனி படி பூஜைக்கு ரூ.1,37,900, சகஸ்ரகலசம் ரூ.91,250, உதயாஸ்மன பூஜை ரூ.61,800 என மேலும் பல பூஜைகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரசாதத்தை பொறுத்தவரையில் கெட்டு நிறைத்தல் ரூ.300, அபிஷேக நெய் ரூ.100, நீராஞ்சனம் ரூ.125, அப்பம் 1 பாக்கெட் ரூ.45 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.