செவ்வாய், 30 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (12:57 IST)

சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை: போலீஸார் எச்சரிக்கை!

சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை: போலீஸார் எச்சரிக்கை!
சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னையின் முக்கிய சாலைகளில் சிறுவர்கள், இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் பைக்ரேஸில் ஈடுபட்ட முப்பத்தி ஏழு இளைஞர்கள் மற்றும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில்  சிறுவர்கள் பைக்ரேஸில் ஈடுபட்டால் இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டப்படி பெற்றோர் மற்றும் பாதுகாவலர் மீது கடும் நடவடிக்கை பாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது