1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (15:59 IST)

தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை !

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் வாகனம் மோதி 2 ஆம் வகுப்பு படித்து வந்த  சிறுவன் தீக் சித் பலியானார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ஜெய சுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி பள்ளி வாகன பாதுகாவலர் ஞானசக்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில், .பள்ளி வாகனத்தில் வரும் மாணவர்களை உதவியாளர்கள், மற்றும் ரெண்டு ஆசிரியர்கள் பாதுகாப்பாக இறக்கி வகுப்பறை வரை பாதுகாப்புடன் செல்வதை உறுதி செய்யவேண்டும்.

இதை முறையாகப் பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளர்.