1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Police Filed another case against Sruthi

போலீஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த மோசடி நடிகை

சுருதி
கோவையில் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்த நடிகை போலீஸாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தால் அவரின் மீது மற்றோரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
ஜெர்மனியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துவரும் சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன், சுருதி என்ற புதுமுக நடிகை மீது சேலம் சைபர் க்ரைம் போலீஸில் மோசடி புகார் கொடுத்தார்.
 
போலீஸாரிடம் பாலமுருகன் கொடுத்த புகாரை ஆய்வு செய்ததில் சுருதி திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களிடம் பண மோசடி செய்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் சுருதியையும் அவரது பெற்றோரையும், சகோதரர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
அவர்களை கைது செய்ய சென்றபோது போலீஸார்க்கு சுருதி கொலை மிரட்டல் விடுத்ததால் மேலும் ஒரு வழக்கும் போடபட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்