1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜனவரி 2018 (19:14 IST)

போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை கொள்ளை

புதுக்கோட்டை அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை கட்டியாவயல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். சுப்பையா கீழப்பழுர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர். 
 
இந்தநிலையில் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, சுப்பையாவின் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு சென்றனர். வீட்டில் நாய் மட்டும் காவலுக்கு இருந்தது. இதனை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டைக் கொள்ளை அடிக்க திட்டமிட்டு வீட்டுக்குள் நுழைந்து, கிடைத்ததை சுருட்டி கொண்டு கிளம்பி விட்டனர். திருவிழா முடிந்து நேற்று இரவு வீடு திரும்பிய சுப்பையாவின் மனைவி வீடு திறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நகை  கொள்ளை போனதை பற்றி தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.