1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Police file a case against DMK member

மது போதையில் பெண் போலீஸிடம் தகராறு! – திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

Tamilnadu
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் பெண் காவலரிடம் குடித்துவிட்டு தகராறு செய்த திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வளையம்பட்டி ஐந்தாம் ரோட்டில் காவலர்கள் வாகன பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி காரில் வந்துள்ளார். அவரது காரையும் காவலர்கள் சோதனையிட முயன்றபோது அதை அவர் தடுத்ததுடன் பெண் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தைகளில் திட்டி தகராறு செய்துள்ளார். மேலும் அவர் மது அருந்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இருந்து பறக்கும் வாகனங்கள்: ராணிப்பேட்டையில் சீல்!!