கணவரைப் பிரிந்த பெண்ணுடன் வாழ்ந்த நபரை கொன்ற கணவன் !

CHENNAI CRIME
sinoj| Last Modified திங்கள், 15 ஜூன் 2020 (23:25 IST)
 

கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சபரிதா என்ற பெண்ணுக்கும் சென்னை ராயபுரத்தில் வசித்து கணேஷ்குமாருக்கும் பழக்கமாகி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இதனால் சபரிதாவின் கணவர் பசுபதிக்கும் கணேஷுக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சபரிதாவின் கணவர் பசுபதி, ஆத்திரத்தில் கணேஷ்குமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் கணேஷின் உடலை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளியான பசுபதியை போலீஸார் தீவிரமாக தேடி விசாரித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :