செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (09:52 IST)

சென்னையில் இருந்து பறக்கும் வாகனங்கள்: ராணிப்பேட்டையில் சீல்!!

கிராமப்புற, நகர்ப்புற சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு முழு கண்காணிப்பில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகள் உள்ளன. 
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 
 
இதனால் சென்னையில் இருந்து தற்போது வாகங்கள் அதிக அளவில் பிற மாவட்டங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளன. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் என பிற மாவட்டங்களுக்கு செல்ல ராணிபேட்டை மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர். 
 
எனவே, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 25 சோதனைச்சாவடிகளை அமைக்கப்பட்டு கிராமப்புற, நகர்ப்புற சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஒரு சுங்கச்சாவடிக்கு 25 காவல்கள் பணியாற்றி வருகின்றனர்.