1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (17:39 IST)

அத்திவரதர் காவல் பணி – காவலர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

அத்திவரதர் தரிசனத்தில் இரவு பகல் பாராது காவல் புரிந்து காவல் துறையினருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் லட்சக்கனக்கில் மக்கள் கூட்டம் வந்தபடி இருந்ததால் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிலை காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பல்வேறு இன்னல்களுக்கிடையே உரவு பகல் பாராமல் 48 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் காவல் துறையினர். ஜூலை 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசனம் ஆகஸ்டு 17 அன்று முடிவடைந்தது.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தங்கள் சொந்த ஊருக்கு பயணப்பட்டனர். அல்லும் பகலும் அயராது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளார் திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன்.

திருவள்ளூர் சராகத்தை தாண்டி வெவ்வேறு லைன் போலீஸாரும், பயிற்சியில் இருக்கும் போலீஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இதே சலுகை உண்டா என்பது குறித்து விவரங்கள் தெரிய வரவில்லை.