திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (16:48 IST)

வைகோ மருத்துவமனையில் அனுமதி: நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ரத்து??

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனியில் மத்திய அரசு நிறைவேற்ற இருக்கும் நியூட்ரினோ திட்டத்தை ஆரம்ப காலம் முதலே எதிர்த்து வருபவர் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ. தற்போது மாநிலங்களவை எம்.பியாக பதவி வகிக்கும் வைகோ அங்கேயும் நியூட்ரினோ திட்டம் குறித்த கண்டனங்களை எழுப்பியுள்ளார். இதற்காக ஆகஸ்டு 20 முதல் 22 வரை 3 நாட்களுக்கு தேனியில் நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார் வைகோ.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஓய்வெட்டுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.