திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (09:58 IST)

சென்னையை புரட்டியெடுக்கும் மழை: வானவில் பார்த்து மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்யும் கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பொழிந்து வருகிறது. கடந்த மாதம் வரை தண்ணீருக்காக குடத்தை தூக்கி கொண்டு ஓடிக் கொண்டிருந்த மக்கள் மழையின் வரவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விடுமுறை நாளானா நேற்று மதியத்திலிருந்து பலமான மழை பெய்தது. மாலை நேரத்தில் மழை அடங்கியபோது உருவான வானவில்லை மக்கள் வெகுவாக ரசித்தனர்.

மேலும் வானிலை ஆய்வு மையம் இந்த மழை தொடர் மழையாக இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் என கூறியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளான சென்னை, கடலூர், நாகப்பட்டிணம், வேதாரண்யம் பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.