வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (17:35 IST)

அபிராமியை பிடிக்க போலீசார் வகுத்த பலே திட்டம்.....

குழந்தைகளை கொன்று விட்டு தப்பி சென்ற அபிராமியை அவரின் கள்ளக்காதலனை வைத்தே போலீசார் மடக்கிப்பிடித்தது தெரியவந்துள்ளது.

 
குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் செய்தி வெளியானது. 
 
பிரியாணி கடையில் அறிமுகமான சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால், அவருடன் வாழ ஆசைப்பட்டு குழந்தைகளை கொன்றுவிட்டதாக அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 
குழந்தைகளை கொலை செய்து விட்டு மொபட் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்ற அபிராமி, அங்கு பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி திருவனந்தபுரம் சென்றுள்ளார். சுந்தரத்தை கைது செய்த போலீசார் அவரை வைத்தே அபிராமியை பிடிக்க திட்டமிட்டனர். 
 
அதன்படி, நான் நாகர்கோவிலில் இருக்கிறேன். நீ இங்கே வந்தால் இருவரும் வேறெங்காவது சென்று சந்தோஷமாக வாழ்வோம் என சுந்தரம் மூலம் அபிராமியிடம் போலீசார் பேச வைத்துள்ளனர். அதை நம்பி அபிராமி நாகர்கோவில் வந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.