திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (18:07 IST)

நடிகையுடன் கள்ளக்காதல் : வாலிபர் அடித்து கொலை

மாயாவி படத்தில் ஊனமுற்ற பெண்ணாக நடித்த நடிகையுடன் கள்ளக்காதல் வைத்திருந்த கார் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

 
இயக்குனர் பாலா தயாரிப்பில் சிங்கம்புலி இயக்கிய படம் மாயாவி. இதில், சூர்யா, ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’ பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். இந்த பாடலில் மாற்று திறனாளியாக இயல்பாக நடித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்றவர் சென்னையை சேர்ந்த விஷ்ணுபிரியா..
 
இவரின் கணவர் ரமேஷ் கிருஷ்ணா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் கிருஷ்ணன் சில மருத்து சிகிச்சைக்காக கொடைக்கானலில் சில வருடம் குடும்பத்தோடு தங்கினார். அப்போது, பிரபாகரன் என்கிற கார் ஓட்டுனர் இவர்களுக்கு அறிமுகமானார்.
 
பிரபாகரனுடன் விஷ்ணுபுரியாவிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது விஷ்ணுப்பிரியாவின் தந்தை சூரியநாராயணனுக்கு தெரிய வர மகளை கண்டித்துள்ளார். ஆனால், விஷ்ணுப்ரியா தனது கள்ளக்காதலை விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சூரிய நாராயணன் பிரபாகரனை கொலை செய்வது என முடிவெடுத்தார். இதற்காக கொடைக்கானலில் வசிக்கும் கூலிப்படையை சேர்ந்த செந்தில் என்பவரிடம் பிரபாகரனை கொலை செய்ய மூன்றரை லட்சம் தருவதாக கூறி டீல் பேசியுள்ளார்.
 
செந்தில் தனது நண்பர் மணிகண்டன் மற்றும் முகமது சல்மானுடன் சேர்ந்து, பிரபாகரனிடம் வாடகைக்கு கார் பேசி அவரை வெளியே அழைத்து சென்று கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். அதன்பின் அவரின் உடலை ஒரு பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
 
ஆனால், பிரபாகரனின் செல்போனில் கடைசியாக பேசிய செந்திலை மடக்கிப்பிடித்த போலீசார் அவர் மூலமாக அவரின் நண்பர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். அதேபோல், ஹைதராபாத்தில் வசிக்கும் விஷ்ணுபிரியாவின் தந்தை சூரிய நாராயணனை  கைது செய்ய போலீசார் ஹைதராபாத் விரைந்துள்ளனர்.
 
இந்த கொலை கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.