1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Police attack cruel on Kovai Jallikattu Protesters

மாணவர்கள் மீது போலீஸ் அத்துமீறல்: முடியை பிடித்து பந்தை போல் வீசி அராஜகம்!

மாணவர்கள் மீது போலீஸ் அத்துமீறல்: முடியை பிடித்து பந்தை போல் வீசி அராஜகம்!

ஜல்லிக்கட்டு
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


 
 
அவசர சட்டம் என்பது தற்காலிக நடவடிக்கை, இந்த சட்டம் வெறும் கண் துடைப்பே எங்களுக்கு நிரந்தர தீர்வாக நிரந்தரமான ஒரு சட்டமே வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒரே குரலில் கூறிவந்தனர்.
 
இந்நிலையில் அரசு காவல்துறையை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு அராஜகமாக அவர்களை ஒடுக்குகின்றது. சென்னை மெரினாவில் உள்ள போராட்டக்காரர்கள் காவல்துறை வலுக்கட்டயமாக இழுத்து அடித்து சென்றது போல கோவையிலும் அராஜகமாக நடந்துள்ளன்னர்.
 
கோவை வ.உ.சி மைதானத்தின் போராட்டக்களத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் மிரட்டி அவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து பந்தைப்போல் வீசினர். இந்த காட்சியை தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்த பொதுமக்கள் அரசின் மீதும் காவல்துறையும் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: வெளியே பதற்றம்; உள்ளே?