1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2017 (10:19 IST)

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: வெளியே பதற்றம்; உள்ளே?

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: வெளியே பதற்றம்; உள்ளே?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் வெடித்துள்ள சூழலில் ஒன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையில் வெடிக்கும் என கூறப்படுகிறது.


 
 
அவசர சட்டம் கொண்டு வந்தும் பொதுமக்கள் நிரந்தர தீர்வு கிடைக்காமல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தொடர் அறப்போரட்டத்தை அராஜகமாக போலீசார் கையாண்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
 
இன்று அதிகாலை முதலே போராட்டத்தை கலைக்க தமிழகம் முழுவதும் காவல்துறை களமிறங்கியது. சென்னை மெரினா, கோவை வா.ஊ.சி. மைதானத்தில் உள்ள போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அடித்து அப்புறப்படுத்தினர். இருந்தாலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
போலீஸ் குவிப்பும், அவர்களின் அராஜக நடவடிக்கையும், பொதுமக்களின் விடாத தொடர் போராட்டமும் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆங்காங்கே கலவரங்கள் நடந்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் பதற்றமான சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு விவகாரமும் போலீசின் அத்துமீறலும் எதிர்கட்சியினரால் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின் சட்ட முன்வடிவு இன்று தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரலாம் என கூறப்படுகிறது.