தொடர்புடைய செய்திகள்
- அன்புச்செழியன் உண்மையில் கிடைக்கவில்லையா? ஏமாற்றத்துடன் திரும்பிய தனிப்படை
- மும்பையில் கைதான தஷ்வந்த் தப்பியோட்டம்: பெரும் பரபரப்பு
- அந்த 2 பேரையும் காணவில்லை ; உயிருக்கு ஆபத்து? : விஷால் பரபரப்பு பேட்டி
- ஹாசினியையும், தாயையும் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த அதிரடி கைது
- தொடரும் வாகன ஓட்டிகள் மீதான போலீஸ் தாக்குதல்கள்
போலீசாரிடமிருந்து தப்பி சென்ற தஷ்வந் மீண்டும் கைது...
சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த, பணம் நகைக்காக பெற்ற தாயையே கொலை செய்த தஷ்வந்த் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகிய நிலையில் நேற்று மும்பையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
இந்த நிலையில் இன்று தஷ்வந்த் சென்னைக்கு வரப்படுவான் என்று கூறப்பட்ட நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிவிட்டதாக திடுக்கிடும் செய்தி வெளியானது.
மும்பை பாந்த்ராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர விமான நிலையம் சென்றபோது தஷ்வந்த் தப்பியதாகவும், மீண்டும் தஷ்வந்தை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாந்து. தஷ்வந்த் தப்பியோடியுள்ளது தமிழக காவல்துறையினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தப்பி ஓடிய இடத்திலிருந்து சிறிய தொலைவில், அதாவது மும்பை அந்தேரியில் அவர் மீண்டும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வருகிற சனிக்கிழமைக்கு அவர் சென்னை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்வார்கள் எனக்கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
