திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2017 (10:04 IST)

அன்புச்செழியன் உண்மையில் கிடைக்கவில்லையா? ஏமாற்றத்துடன் திரும்பிய தனிப்படை

சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாகியுள்ள பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெங்களூர், ஐதராபாத் உள்பட பல நகரங்களில் சல்லடை போட்டு அவரை தேடி வந்தனர்.
 
இந்த நிலையில் அன்புச்செழியனை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் நேற்று சென்னை திரும்பினர். அன்புச்செழியன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும், அவர் இடம் மாறிக்கொண்டே இருப்பதால் பிடிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஸ்காட்லாந்து போலிசாருக்கு இணையான தமிழக போலீஸ் ஒரு சாதாரண பைனான்சியரை பிடிக்க முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அன்புச் செழியன் சார்பில் மீண்டும் ஒரு முன் ஜாமின் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.