ரூ.2,925 கோடி கொடுத்து இயேசுவின் ஓவியத்தை வாங்கிய இஸ்லாமியர்!!

Last Updated: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (15:44 IST)
உலகப்புகழ் பெற்ற லியனார்டோ டாவின்சி மோனலிசா புகைப்படத்தை வரைந்தவர். தற்போது இவர் வரைந்த ஓவியன் ஒன்று ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இவர் சால்வேடர் முன்டி என்ற தலைப்பில் வரைந்த இயேசு ஓவியம் லண்டன் ஷோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலம் போனது.
இந்த ஓவியத்தை சவுதி அரேபியாவின் இளவரசர்களில் ஒருவரான பாதர் பின் அப்துல்லா பின் முகமது பின் பர்காள் அல்- சவுத் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.


இந்த தகவலுக்கான ஆவணங்களும் வெளியாகியுள்ளது. மேலும் இத்தகவலை ஷோத்பீ ஏல மையத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.தற்போது இந்த ஓவியம் அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லாவ்ரே அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இயேசு ஓவியத்தை முஸ்லிம் இளவரசர் வாங்கியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :