வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (12:33 IST)

பல்லடத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை! – வட இந்திய வியாபாரி கைது!

பல்லடம் பகுதியில் சாக்லேட்டில் கஞ்சா கலந்து புதுவிதமாக வியாபாரம் செய்த வியாபாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் கடந்த சில மாதங்கள் முன்னதாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை தொடங்கப்பட்டது. இதில் பல பெட்டிக்கடைகள், குடோன்களில் ரெய்டு நடத்திய போலீஸார் கஞ்சா, தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட வட இந்திய குட்கா பொருட்கள் உள்ளிட்ட பல போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பலர் கைது செய்யப்பட்டனர், பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு போலீஸ் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 வை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உஷாரான பலர் வெவ்வேறு விதமாக போதை பொருள்களை விற்பதாக தெரிகிறது. பல்லடம் அருகே குங்குமம்பாளையத்தில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அந்த பகுதிகளில் ரெய்டு நடத்திய போலீஸார் கஞ்சா சாக்லேட் விற்ற பெட்டிக்கடை வியாபாரியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜய் மொஹாண்டி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.