செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (19:49 IST)

அசம்பாவிதம் நடக்கும்: காவல்துறையில் ஓபிஎஸ் மனு

ops
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் அசம்பாவிதம் நடக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் காவல்துறையில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சார்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த மனுவில் இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் பொதுக்குழுவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பொதுக்குழு கூட்ட அனுமதி கேட்டு உள்ளார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்
 
 இந்த மனு மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்