திருச்செந்தூர் கோயில் தங்கும் விடுதியில் விஷம்பாம்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள தங்கும் விடுதியில், ஒரு விஷம்பாம்பு நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி இயங்கி வருகிறது.
இந்தக் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் இந்த விடுதியில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம்.
இந்த நிலையில், இவ்விடுதியை இன்று சுத்தம் செய்ய வந்த பணியாளர்கள் 3 அடி நீளமுள்ள விஷப்பாம்பை பார்த்து அதிர்ச்சசியடைந்தனர்.
இதுகுறித்து, கோயில் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாவலர் ஒருவர் அப்பாம்பை அடித்து குழிதோண்டிப் புதைத்தார்.
இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Sinoj