1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. pmk sudden decision to join in bjp alliance

கடைசி வரை சஸ்பென்ஸ் வைக்கும் பாமக.. முடிவில் திடீர் மாற்றம்..!

பாரதிய ஜனதா கட்சி. பாமக. தேமுதிக
பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று வரை அதிமுக கூட்டணியுடன் பாமக இணைவது உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது திடீரென பாஜக கூட்டணியில் இணைய மீண்டும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளிலே மிகவும் குழப்பமான கட்சிகளாக பாமக மற்றும் தேமுதிக இருப்பதாகவும் எந்த கூட்டணியில் இணைவது என்ற ஒரு கொள்கை முடிவு இல்லாமல் யார் அதிக சீட் தருகிறார்கள்? யார் அதிக பணம் தருகிறார்கள் என்ற பேச்சு வார்த்தையில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் தாட்டி வருகின்றனர்.

அதை  போல் தினமும் ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வரும் இரு கட்சிகள் நேற்று வரை அதிமுகவுடன் கிட்டத்தட்ட கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி பாஜக பக்கம் பாமக செல்ல உள்ளதாகவும் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, ஜி கே மணி பங்கேற்று பாஜக கூட்டணியில் இணைவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கரும்பு விவசாயி சின்னம்.. மனுவை மின்னஞ்சலில் அனுப்புமாறு தலைமை நீதிபதி அறிவுரை