வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (08:44 IST)

400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசுவது திமிர்த்தனம்: நடிகர் பிரகாஷ்ராஜ்

prakashraj
பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசுவது திமிர்த்தனம் என்றும் ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசி உள்ளார் 
 
சமீபத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசியதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பேசுகிறார்கள் என்றும் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசும் கட்சிகள் திமிர் தனமானவை என்றும் அவர் கூறியுள்ளார்
 
ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும் 400 இடங்களுக்கு மேல் வெற்றி வருகிறது என்றால் மோசடி மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் லோக்சபா தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Edited by Siva