தொடர்புடைய செய்திகள்
- பீகார் தேர்தலில் ராகுல் முழுக்கவனம் செலுத்தவில்லை – ராஷ்டிரியா ஜனதா தளம் குற்றச்சாட்டு!
- ’’கொலைவெறி டீ ‘’ நாளில்...’’ரவுடி பேபி’’ பாடல் 1 பில்லியன் வியூஸ்…தனுஷ், யுவன் டுவீட்
- ராகுலை விமர்சித்த ஒபாமா..... மன்மோகன் சிங்கிற்குப் புகழாரம் !
- தம்பி ஆர்.ஜே.பாலாஜி தோலுரிச்சு காட்டிட்டார்! – மூக்குத்தி அம்மனுக்கு சீமான் வாழ்த்து!
- நிலப்பிரச்சினையால் தகராறு; துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளர் கைது!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை கோரும் ராமதாஸ்!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கு பதிலாக ஒப்புகைச் சீட்டுகளைத் தான் எண்ண வேண்டும் என்று ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ள கருத்துகள் சரியானவை; வரவேற்கத்தக்கவை.
மேலும், கருத்துக்கணிப்புகள் திரிக்கப்படுபவை. திணிக்கப்படுபவை. ஒரு தரப்புக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவது ஐயங்களைப் போக்கும். தேர்தல் முடிவுகள் மிகவும் வெளிப்படையாக அமைவதை உறுதி செய்யும் என பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
