ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (16:46 IST)

பிரபல ஸ்வீட் கடை பங்குதாரர் மகன் தற்கொலை! திருமணம்தான் காரணமா?

தமிழகத்தின் பல பகுதிகளில் பிரபலமாக இயங்கி வரும் ஸ்வீட் கடைகளில் ஒன்று பி ஜி நாயுடு ஸ்வீட் ஸ்டால்.

தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட கிளைகளோடு இயங்கி வரும் ஸ்வீட் ஸ்டால்களில் ஒன்று பி ஜி நாயுடு ஸ்வீட் ஸ்டால். இந்த கடையின் பங்குதாரர்களில் ஒருவர் பத்ரிநாத். இவருக்கு முக்திநாத் என்ற மகன் உள்ளார். அவருக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இன்று திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய படி பிணமாகக் கிடந்தார்.

இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் அதனால் திருமணம் வேண்டாம் என மறுத்ததாகவும், ஆனால் கட்டாயப்படுத்தி திருமணம் நிச்சயம் செய்ததால் தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.