செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (15:45 IST)

அவர் தொகுதிக்கு செய்வார்.. தருமபுரிக்கு தண்ணீர் தரலை! – எடப்பாடி பழனிசாமி மீது ராமதாஸ் விமர்சனம்!

காவிரியிலிருந்து தருமபுரிக்கு தண்ணீர் வழங்க வேண்டி பாமக கவன ஈர்ப்பு பயணத்தை நடத்தி வருகிறது.

காவிரியிலிருந்து கடலில் கலக்கும் உபரிநீரை தருமபுரிக்கு அளிக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பாமக நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கவன ஈர்ப்பு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “கடலில் கலக்கும் 100 டிஎம்சி தண்ணீரிலிருந்து தருமபுரிக்காக 3 டிஎம்சி தாருங்கள் என எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கோரிக்கை விடுத்தோம். ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்த திட்டத்திற்கு ஒதுக்குவதற்கு நிதி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். அவரது மாவட்டத்திற்கு ஒதுக்க மட்டும் 500 கோடி நிதி இருந்தது. ஆனால் தர்மபுரிக்கு உபரிநீர் வழங்க மட்டும் நிதியில்லை” என்று விமர்சித்துள்ளார்.