1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (13:41 IST)

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டது பெரும் பின்னடைவு: டாக்டர் ராமதாஸ்

ramadoss
மின் பகிர்மான கழகத்திற்கு ரூபாய் 5500 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பாக்கி வைத்திருப்பதால் தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இது குறித்து டாக்டர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது
 
மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியை செலுத்தத் தவறியதால், மின்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் பின்னடைவு ஆகும்!
 
தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது!
 
தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக் கூடும்!
 
மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும்!