செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (14:02 IST)

ஜெயகுமார் பேசுவது சரியல்ல - கே.பாலு கண்டனம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

 
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யாருடைய அழுத்தத்தின் பேரில் அவர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் பாமக தனித்து போட்டியிட விரும்பினால் அவர்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதிமுக குறித்தோ, கட்சி உள்விவகாரங்கள் குறித்தோ பேச உரிமை கிடையாது என தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே பாமக குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய கருத்துக்களுக்கு பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் வழியாகும் தகவல்களின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டாம், யூகத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது சரியல்ல என கூறியுள்ளார்.