1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (12:13 IST)

1 - 8 மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30 ஆம் தேதி முடிவு?

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தகவல். 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் அடுத்த கட்டமாக 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு திறக்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 
 
இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த அறிக்கையின் அடிப்படையில்  தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும்.  தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா? கூடுதல் தளர்வுகளை அறிவிப்பதா? என கூட்டம் நடத்தி முடிவு செய்த பிறகு பள்ளி குறித்து முடிவு செய்யப்படும் என அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.