திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (18:29 IST)

விசிக - பாமக நேரடி போட்டியா? பரபரப்பு தகவல்..!

சமீபத்தில் பாஜக கூட்டணியில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இரண்டு தொகுதிகள் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
 
 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணியை முடித்துவிட்டு வேட்பாளர்களை அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் விழுப்புரத்தில் ரவிக்குமார் மற்றும் சிதம்பரத்தில் திருமாவளவன் ஆகியோர் போட்டி உள்ளனர்.
 
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் குறித்த பட்டியலில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டு தொகுதிகளிலும் பாமக நேரடியாக மோதவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Mahendran