திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (14:20 IST)

தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்துவிட்டது- பிரதமர் மோடி

Modi
வரும் மக்களவை தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
நேற்று கோவையில் பிரதமர் மோடி கோவையில் வாகன பேரணியில் பங்கேற்றார்.
 
இன்று 2 வது நாளாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலம் விமான நிலையம் வந்தார் மோடி. அங்கியருந்து கார் மூலமாக பொதுக்க்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல் நாய்க்கன் பட்டிக்கு வந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பிரதமர் மோடி, எனக்கு கிடைத்த ஆதரவால் திமுகவிற்கு தூக்கம் தொலைந்துவிட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும். கட்சிக்காக நேர்ன்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ஆடிட்டர் ரமேஷ் உள்பட பாஜக நிர்வாகிகள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
 
இன்றைய பாஜக பொதுக்க்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி. தினகரன், ஜி.கே.வாசன். ஏ.சி.சண்முகம் . தமிழருவி மணியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் கலந்துகொண்டனர்.