வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (11:25 IST)

அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர்: அண்ணாமலை

பாஜக கூட்டணியில்  பாமக இணைந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

மக்களவைத்  தேர்தலில் பாஜக - பாமக இணைந்து செயல்படும் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ் கையெழுத்திட்ட நிலையில்  ஒப்பந்தம் கையெழுத்தான பின் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி  பெறும் . பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்

தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது. ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய போது '2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 57 ஆண்டு காலம் இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள், மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து ஆழமாக உள்ளது, அதற்கு ஏற்ப பாமக முடிவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran