வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (14:01 IST)

பாஜக கூட்டணியில் சேர்ந்த சிலமணி நேரத்தில் கிடைத்த மாம்பழம் சின்னம்: பாமகவினர் மகிழ்ச்சி..!

ramdoss
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக மாம்பழம் சின்னத்தை கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறாத கட்சிகள் தாங்கள் போட்டியிடும் சின்னத்தை விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பாமக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தரத்தை இழந்த நிலையில் மீண்டும் மாம்பழம் சின்னத்தை விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்த பரிசீலனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. 
 
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் பாமக இணைவது உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் அக்கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது தற்செயலாக நடந்ததா? அல்லது பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததால் நடந்ததா? என்பது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாம் தமிழர் கட்சி உள்பட சில கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் கிடைக்காத நிலையில் பாமகவுக்கு மட்டும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
Edited by Siva