வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (11:33 IST)

மீண்டும் சிதம்பரத்தில் களமிறங்கும் திருமாவளவன்! விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு!

thirumavalavan
விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடும் நிலையில் அதன் வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.



மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடவுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூட்டணியில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த முறை விசிக கட்சி நின்று வெற்றிபெற்ற தனித்தொகுதிகளான சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளே இந்த முறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் கடந்த முறை விசிக தலைவர் திருமாவளவனும், ரவிக்குமாரும் நின்று வெற்றிப்பெற்றிருந்த நிலையில், இந்த முறையும் மீண்டும் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் விசிகவின் சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக விசிக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் நாளை திமுகவும் தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளது.

Edit by Prasanth.K