1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PM Modi visit two days in tamil nadu

2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. முழு பயணத்திட்டம் இதோ..!

modi speech
பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவருடைய பயணம் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 
பிரதமர் மோடி கடந்த சில மாதங்களில் அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் வருகை தர உள்ளார். 
 
பிப்ரவரி 27ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபின், 28ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.  
 
பிப்ரவரி 27:
 
மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்.
 
மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர்.
 
2.45 முதல், 3.45 வரை என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர்.
 
3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து, பல்லடம் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.
 
5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்.
 
6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்.
 
அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கிறார்.
 
பிப்ரவரி 28
 
காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்.
 
8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார்.
 
9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
 
10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார்.
 
11.15 முதல் 12.15 மணி வரை பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார்.
 
12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்! பக்தர்கள் வசதிக்காக 1084 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!