1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. plus one student planned to murder her father at Theni

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தை கொலை செய்ய திட்டமிட்ட பிளஸ் 1 மாணவி.. அதிர்ச்சி தகவல்..!

காதலன்
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற தந்தையையே காதலன் மற்றும் அவரது நண்பர்களை வைத்து கொலை செய்ய பிளஸ் ஒன் மாணவி ஒருவர் திட்டமிட்ட சம்பவம் தேனி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தேனி அருகே பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்து காமாட்சி என்பவரை காதலித்தார். இதனை அடுத்து மாணவிகளின் தந்தை வேணுகோபால் மகளை கண்டித்ததோடு பெரிய குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து அங்கு படிக்க வைத்தார். 
 
இந்த நிலையில் தன்னையும் காதலனையும் பிரித்து வைக்க தனது தந்தை திட்டமிட்டதால் அவரை கொலை செய்ய அந்த மாணவி திட்டமிட்டுள்ளார்.  காதலன் மற்றும் அவர்களது நண்பர்களை வைத்து  வேணுகோபாலை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில் அவர்கள் கொலை முயற்சியை செய்த போது காவல்துறையினர்களிடம் மாட்டிக் கொண்டனர்.
 
 இதனை அடுத்து முத்து காமாட்சி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பிரக்ஞானந்தாவுக்கு விலையுயர்ந்த எலக்ட்ரி கார் பரிசு.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு..!