பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சென்னை மாநகராட்சி ஊழியர்.. போக்சோ சட்டத்தில் கைது;
பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சென்னை மாநகராட்சி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள பள்ளி மாணவி ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த மகிமை ராஜ் என்ற 48 வயது நபர் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் மகிமை ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மகிமை ராஜ் சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவி குளிப்பதை 48 வயது நபர் ஒருவர் வீடியோ எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran