1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. plus one student commited sucide in coimbatore

சாதி ரீதியாக கிண்டல்!.. பிளஸ் ஒன் மாணவர் தற்கொலை!.. கோவையில் அதிர்ச்சி!..

student
கோவையில் கே.கே. நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பள்ளி ஆசிரியர் விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டியலின மாணவரான அகிலனை ஸ்காலர்ஷிப் விவகாரத்தில் சாதி ரீதியாக சக மாணவர்களும், ஆசிரியர் விஜயகுமாரும் கிண்டல் செய்ததால் மனமுடைடைந்த அகிலன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து பி.சி.ஆர் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பீளமேடு போலீசார் ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பிள்ளையை இழந்து விட்டதாக அகிலனின் பெற்றோர் கண்ணீருடன் கதறியது காண்போரை உலுக்கியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பொதுப்பணித்துறையில் அதிரடி மாற்றங்கள்.. வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என தகவல்...