தொடர்புடைய செய்திகள்
- மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு: தமிழ்நாட்டில் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சோகம்: அன்புமணி
- சாதியைக்கூட மன்னிக்கலாம், ஆனால்.. நாங்குநேரி விவகாரம் குறித்து வைரமுத்து..!
- அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா.. நாங்குநேரி சம்பவம் குறித்து ராஜ்கிரண் ஆதங்கம்..!
- நாங்குநேரி சம்பத்தில் திமுக கண்டிக்க திராணியில்லை.. திருமாவளவன் குறித்து பாஜக பிரமுகர்..!
- நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம்தான் காரணம்: டாக்டர் கிருஷ்ணசாமி
நாங்குநேரி சென்ற ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள்.. பாதிக்கப்பட்ட மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி..!
நாங்குநேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இன மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திநிலையில் படுகாயம் அடைந்த மாணவன் தற்போது நெல்லை பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாணவனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் நெல்லை சென்றனர்.
மருத்துவர்கள் அந்த மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை தொடர்பான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அந்த மாணவன் படிப்படியாக உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
