தொடர்புடைய செய்திகள்
- ஆர்பாட்டத்தில் இறங்கும் திமுகைனர் - உறுதிப்படுத்திய ஸ்டாலின் !
- பெட்ரோலுடன் தண்ணீர் கலப்பு: பாதியில் பழுதாகி நின்ற வாகனங்கள்!
- பெட்ரோல் விலை பெரிதாக உயரவில்லை: முதல்வர் சர்ச்சை கருத்து!
- திருமண பரிசாக சின்ன வெங்காயம், பெட்ரோல்! – சென்னையில் விநோத திருமண பரிசு!
- பெட்ரோல் விலை எங்க கையில் இல்லை.. ஆயில் நிறுவனங்கள் முடிவு! – நிர்மலா சீதாராமன்!
இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை!
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதாவது ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்களிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லாமல் அதே விலையில் விற்பனை ஆகி வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
பெட்ரோல் விலை இன்று சென்னையில் 31 காசுகள் உயர்ந்து 92.90 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை 33 காசுகள் விலை உயர்ந்து 86..31 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் முப்பது காசுக்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜஸ்தான் உள்பட ஒருசில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்ட நிலையில் வெகு விரைவில் சென்னையிலும் 100ஐ தாண்டும் என்று எதிர்பார்ப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக லாரி வாடகை உயர்ந்துள்ளதால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
