ஆர்பாட்டத்தில் இறங்கும் திமுகைனர் - உறுதிப்படுத்திய ஸ்டாலின் !
இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மாற்று எரிபொருளை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறியதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வரும் 22 ஆம் தேதி தமிழகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதனை திமுக தலைவர் ஸ்டாலினும் உறுதிப்படுத்தியுள்ளார்.