பெட்ரோல் விலை எங்க கையில் இல்லை.. ஆயில் நிறுவனங்கள் முடிவு! – நிர்மலா சீதாராமன்!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கியுள்ளது. மேலும் பல பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “இது மிகவும் தர்மசங்கடமான கேள்வி. எண்ணெய் நிறுவனங்கள் நினைத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க முடியும். எரிபொருட்கள் மீதான வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.