1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at Chennai

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்!

பெட்ரோல்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த எண்பத்து மூன்று நாட்களாக சென்னையில் உயராத நிலையில் இன்று 84வது நாளாகவும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தபோதிலும் சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை
 
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் விலை ஏற்றம் இல்லை என்று கருதப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 எனவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
About Writer
siva